Home செய்திகள்உலக செய்திகள் தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

by Abubakker Sithik

தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் நம்பிக்கை இல்லை எனவும், மக்களை ஏமாற்றும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறி தமிழகம் முழுவதும் பிப்.23 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த வகையில், தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது. மாறாக, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டைப் பெறும் இயந்திரமும் இணைக்கப்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்த பின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com