Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு -20

(கி.பி 750-1258)

சலாவுதீன் அய்யூபி அவர்களின் எதிரியான இங்கிலாந்து மன்னர் ரிச்சர்ட் ,ரம்லாவில் நோயுற்று ஒரு மாளிகையில் தங்கி இருந்தார்.

அவர் இருக்கும் பகுதிகளில் போர் பதற்றம் இருந்ததால், அவருக்கு மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை.

ஆகவே மாறுவேடம் பூண்டு சலாவுதீன் அய்யூபி அவர்கள் ரம்லா சென்று நோயுற்று இருந்த இங்கிலாந்து மன்னரை சந்தித்து உதவிகள் புரிந்தார்.

தன்னுடன் அழைத்து வந்திருந்த மருத்துவர்கள் மூலம் அவருக்கு சிறப்பு சிகிச்சையும் செய்து அவரை அவரது நாட்டிற்கு தப்பிச்செல்வும் உதவி புரிந்தார்.இந்த செயல் உலக வரலாற்றில் அதிசயமானதாகும்.

சலாவுதீன் அய்யூபி அவர்களின் படையில் ஏராளமான ஹாபிழ்கள் (குர்ஆனை மனனமிட்டவர்கள்) இருந்தனர்.

ஆகவே அய்யூபி அவர்கள் தனது வெற்றி ஆயுத பலத்தாலோ‌, ஆட்களின் பலத்தாலோ இல்லை . மாறாக குர்ஆனை ஓதும் நல்ல மனிதர்களால்தான் சாத்தியமாகிறது என்பதையே எப்போதும் கூறுவார்.

ஜெருசலேம் மஸ்ஜிதுல் அக்ஸா இவரால் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

இவர் எகிப்தில் சிறப்பாக ஆட்சி செய்தபோது சிரியா டமாஸ்கசில் நூர்தீன் ஜங்கி மரணமடைந்தார்.

அவரது இளவயது மகன் மாலிக் சாலிஹ் பதவி ஏற்றார். சிறு வயதாக இருந்ததால் அமைச்சர்களால் ஏமாற்றப்பட்டார்.

இதனை கண்ட அய்யூபி அவர்கள் அமைச்சர்களை எச்சரித்தார். பல நிர்வாக உதவிகளையும் செய்தார்.

நூர்தீன் சங்கி அவர்களின் கனவில் ஒருநாள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் தோன்றி, மதினாவில் தனது ரவ்லாவை (அடக்க இடம்) சுற்றி இரண்டு நபர்கள் தவறாக‌ ஏதோ செய்கிறார்கள் அதை தடுத்து நிறுத்தவும் என கூறினார்கள்.

மேலும் அந்த இரண்டு நபர்களின் உருவமும் நூர்தீன் ஜங்கி அவர்களுக்கு காட்டப்பட்டது.

நூர்தீன் ஜங்கிக்கு மீண்டும் இரண்டு நாட்கள் தொடர்ந்து கனவின் மூலம் அந்த இருவரின் உருவமும் காட்டப்பட்டது.

ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை உணர்ந்த நூர்தீன் ஜங்கி அவர்கள் உடனடியாக மதினாவிற்கு கிளம்பினார் .

தனது வீரர்களுடன் கிளம்பிய சிரியா டமாஸ்கசின் ஆட்சியாளரான நூர்தீன் ஜங்கி, அதி விரைவாக மதினா நகரை வந்தடைந்தார்.

மதினா சென்றடைந்ததும் மதினாவில் வசிக்கும் ஆண்கள் அனைவரையும் மஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசலில் கூட்ட சொல்லி கவர்னருக்கு உத்தரவிட்டார்.

எல்லோரும் பள்ளிவாசலில் கூடிவிட இவர் கனவில் பார்த்த அந்த இருவர் அந்தக்கூட்டத்தில் இல்லை.

எல்லோரும் வந்துவிட்டார்களா என வினவப்பட, இருவர் மட்டும் வரவில்லை என கூறப்படுகிறது.

அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்ற பாதுஷா அவர்கள், அவர்கள் இருவரும் மிகுந்த வணக்க சாலிகளாக இருப்பதை பார்த்தார்கள். பாதுஷா எதிர்பார்த்த உருவமும் இல்லை.

பாதுஷா அந்த வீட்டை சுற்றி வந்து ஏதோ சந்தேகப்பட்டவராக, தரையில் விரித்திருந்த கம்பளத்தை உயர்த்திப்பார்க்க‌ அங்கிருந்து ஒரு சுரங்கப்பாதை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் ரவ்லாவை (அடக்கஇடம்)நோக்கி தோண்டப்பட்டு இருந்தது.

உடனடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது மதினாவின் புகழை குறைக்க பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் உடலை எடுத்து செல்ல,

சுரங்கம் தோண்டியதை அந்த மாறுவேடத்தில் இருந்த இரண்டு யூதர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்களின் மாறுவேடம் கலைக்கப்பட்ட போது நூர்தீன் ஜங்கி அவர்கள் கனவில் பார்த்த அதே உருவமாக இருந்தனர்.

அவர்கள் தண்டிக்கப்பட்டதுடன் ரவ்லாவை (அடக்க இடம்) சுற்றி பூமியில் தாமிர கலவைகளால் பூசப்பட்டு குழிகள் தோண்ட முடியாதவாறு அடைக்கப்பட்டது. *(இந்த தகவலை உலமாக்கள் உறுதிப்படுத்த வேண்டும்)*

நூர்தீன் ஜங்கியின் மகன் மாலிக் சாலிஹ் வாரிசுகள் இல்லாமல் மரணமடைந்தார்.

அவரது மனைவி அமைச்சர் இஜ்ஜுதீனை மணமுடித்தார்.அவர் மம்லூக்கியராக இருந்ததால் மம்லூக்கிய அரசு ஏற்பட்டது.

சலாவுதீன் அய்யூபியோடு சிலுவைப்படை வீரர்களின் மோதல் ஏற்பட்டது. சிலுவை போர்களின் நிலைகள் என்ன??

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!