Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 75வது குடியரசு தினவிழா; நலத்திட்ட உதவிகள் மற்றும் நற்சான்றுகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 75வது குடியரசு தினவிழா; நலத்திட்ட உதவிகள் மற்றும் நற்சான்றுகள் வழங்கல்..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டம் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஜனவரி 26 அன்று நடைபெற்ற 75-வது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 242 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். சுதந்திரப் போராட்ட தியாகி கி. லெட்சுமிகாந்தன் பாரதி இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களுக்கும் மற்றும் சாவடி அருணாச்சலம் பிள்ளை அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார். தென்காசி மாவட்ட காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு புறாக்களை பறக்க விட்டு மூவர்ண பலூனினை வானில் பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தென்காசி காவல்துறை சார்பில் 30 காவலர்களுக்கும், வனத்துறை சார்பில் 02 வன அலுவலர்களுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் 42 அலுவலக பணியாளர்களுக்கும், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறையின் 03 அலுவலக பணியாளர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் 30 அலுவலக பணியாளர்களுக்கும், மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப துறையின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், கூட்டுறவுத் துறையின் (பொது விநியோகத்திட்டம்) 02 அலுவலக பணியாளர்களுக்கும், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் 01 பணியாளருக்கும், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 04 அலுவலக பணியாளர்களுக்கும், கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) 01 அலுவலக பணியாளருக்கும், இணை இயக்குநர் (விவசாயம்) துறையின் 06 அலுவலக பணியாளர்களுக்கும்,

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், வேளாண் அறிவியல் மையத்தின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், பட்டு வளர்ச்சித் துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், தோட்டக்கலைத் துறையின் 10 அலுவலக பணியாளர்களுக்கும், நெடுஞ்சாலைத் துறையின் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) 04 அலுவலக பணியாளர்களுக்கும், இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) துறையின் 20 அலுவலக பணியாளர்களுக்கும், துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) துறையின் 20 அலுவலக பணியாளர்களுக்கும், இந்திய சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் 03 அலுவலக பணியாளர்களுக்கும், அவசர ஊர்தி சேவை (108) துறையின் 05 அலுவலக பணியாளர்களுக்கும், நம்பிக்கை மையத்தின் (எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம்) 03 அலுவலக பணியாளர்களுக்கும், பள்ளி கல்வித்துறையின் துறையின் 03 அலுவலக பணியாளர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் துறையின் 06 அலுவலக பணியாளர்களுக்கும்,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் 03 அலுவலக பணியாளர்களுக்கும், மாவட்ட சமூகநலத் துறையின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், நூலகத்துறையின் 08 அலுவலக பணியாளர்களுக்கும், மாவட்ட குழந்தை பாதுகாப்புத் துறையின் 01 அலுவலக பணியாளருக்கும், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்டத் துறையின் 05 அலுவலக பணியாளர்களுக்கும், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்துறையின் 01 அலுவலக பணியாளருக்கும், கால்நடை பராமரிப்புத் துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் துறையின் 03 அலுவலக பணியாளர்களுக்கும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீடுத் துறையின் 01 அலுவலக பணியாளருக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துறையின் 03 அலுவலக பணியாளர்களுக்கும், என மொத்தம் 242 நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.27,000 மதிப்பில் 3 சக்கர வாகன சைக்கிள்களையும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.25,000 மதிப்பில் பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டதற்கான விருதுகளையும், 1 பயனாளிக்கு சிறந்த விடுதி பராமரிப்பதற்கான ரூ.18,000 மதிப்பிலான பரிசினையும், 1 பயனாளிக்கு சிறந்த வங்கிக்கான விருதினையும், 03 பயனாளிகளுக்கு சிறந்த வங்கி கிளைக்கான ரூ.30,000 மதிப்பிலான பரிசினையும், 1 பயனாளிக்கு உலக சாதனை படைத்தவர் விருதினையும், 04 மருத்துவமனைகளுக்கு சிறந்த மருத்துவமனைக்கான விருதினையும், 03 பயனாளிகளுக்கு முன்னாள் பள்ளி மாணவர்கள் மேலாண்மைக்குழுவில் சிறப்பாக செயலாற்றியதற்கான பள்ளிக்கல்வித்துறை விருதுகளையும், 03 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கான விருதுகளையும், சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் என 05 விருதுகளையும், 06 ஆசிரியர்களுக்கு 100 சதவீதம் வருகை புரிந்த ஆசிரியர்களுக்கான ரூ.30,000 மதிப்பில் வெகுமதியினையும் மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிநாடார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தி.உதய கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல்காதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பிரேமலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி. மதிவதனா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!