Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -20
(கி.பி 661-750)

ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பமும் கூபாவிலிருந்து 25 மைல்கள் தொலைவில் உள்ள
கர்பலாவை அடைந்தது.

உமைய்யா படையின் தளபதி அம்ருஇப்னு சஃஅத் அவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களிடம் யஜீதை அங்கிகரிக்குமாறு
பணிவுடனே வேண்டினார்.

லுஹர் நேரம் வந்தபோது ஹுசைன் (ரலி) அவர்களையே இமாமாக நின்று தொழவைக்க சொல்லி தளபதிசஃத் பின் நின்று தொழுதார்.

சிம்ரு இப்னு தில்ஜோசன் என்ற உபதளபதி ஆளுநர் இப்னு ஜியாதிற்கு
தளபதி அம்ரு இப்னு சஃஅத் அவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு மிகவும் இணக்கமாக நடப்பதாக செய்தி அனுப்ப அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு
தில்ஜோசனை தளபதியாக நியமித்து கவர்னர் இப்னு ஜியாத் உத்தரவிட்டார்.

ஹுசைன் (ரலி) அவர்கள் நிலமையின் விபரீதத்தை புரிந்து கொண்டு எனக்கும் யஜீதிற்குமே பிரச்சினை.நான் டமாஸ்கஸ் சென்று யஜீதிடம் பேசிக்கொள்கிறேன்
வழிவிடுங்கள் என்று கேட்டார்கள்.

மிகக்கடுமையான வெயில் காலம்.தாகம் தொண்டையை அடைத்தது.
குழந்தைகளும் பெண்களும் தண்ணீருக்கு தவித்தார்கள்.
தண்ணீர் கிடைக்காமல் ஹுசைன் (ரலி) அவர்களின் குழுவினர் தடுக்கப்பட்டார்கள்.

சரியான ஆயுதங்களும், வீரர்களும், இல்லாத ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.

இறுதியாக ஹுசைன் (ரலி )அவர்களின் தலையை தனியாக துண்டித்து எடுக்கிறான்
தில்ஜோசன்.

இந்தப்படுகொலை தனக்கு மிக உயர்ந்த பதவியை பெற்றுத்தரும் என்று நம்பிய தில்ஜோசன்
ஹுசைன் (ரலி) அவர்களின் தலையை தனிப்பெட்டியில் வைத்து கவர்னருக்கு அனுப்பினான்.
கவர்னர் அதனை டமாஸ்கஸ்ஸிற்கு அனுப்பினார் .

டமாஸ்கஸ் சென்ற அந்த பெட்டியில் இருந்த ஹுசைன் (ரலி) அவர்களின் தலையை பார்த்து யஜீத் கதறி அழுதார்.
டமாஸ்கஸ் நகரில் தலை அடக்கம் செய்யப்பட்டது.
அடக்கப்பட்ட சரியான இடம் எது என்று தெரியவில்லை.

ஹுசைன் (ரலி) அவர்களின் உடல் கர்பலாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
அடக்கப்பட்ட சரியான இடம் எது என்பதும் தெரியவில்லை.

யஜீத் அவர்கள் தனக்கான ஒப்புதலை எப்படியாவது வாங்கிவிடுங்கள் என்று சொன்னதை
தவறாக அர்த்தப்படுத்தியதின்
விளைவாக மிகப்பெரிய உயிர்பலிகளை ஏற்படுத்தி,

இஸ்லாமிய வரலாற்றில் மாற்றவே முடியாத கருப்புப் பக்கங்களாக
கர்பலா நிகழ்வு பதிந்து போய்விட்டது.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் முத்தமிட்டு
பிரியமுடன் வளர்த்த
ஹுசைன் (ரலி) அவர்களின் உடல் சிதைக்கப்பட்டதை
முழு இஸ்லாமிய உலகமும் ஏற்கவில்லை.

இன்று வரை யஜீதை ஒரு கொலைகாரராகவே
இஸ்லாமிய உலகின் பலர் கருதுகின்றனர்.
இது ஒரு அரசியல் படுகொலை என்பதே
இப்னு கல்தூண்
இப்னு கதீர் போன்ற வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகவும் கூறப்படுகிறது.

யஜீதிடம் அனுப்பிவைக்கப்பட்ட
உயிரிழக்காத ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தினர்
களுக்கு,யஜீது
மிகப்பெரிய அளவில் அன்பளிப்புகள் கொடுத்து மதினாவிற்கு அனுப்பி வைத்தார்.

அரசியல் வரலாறு
அதற்கென தனி நீதி நியாயத்தோடே நகர்கிறது.
அரசாட்சி,பதவி,சுகம் என்று வரும்போது புனிதங்களும்,
நியாயங்களும் புறக்கணிக்கப்பட்டு
ஆட்சி பீடங்கள் கண்களை மறைக்கும் போது அப்போதைய அரசியல் நீதி வேறு வகையாக அமைந்து விடுகிறது.
அதுவே இதுபோன்ற நிகழ்வுகளிலும் நடந்தது.

யஜீதின் ஆட்சியில் ஏற்பட்ட அடுத்தடுத்த இரண்டு அதிர்ச்சி நிகழ்வுகளை பேசுவோம்.

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -21


(கி.பி 661-750)

தலைநகர் டமாஸ்கஸில் இருந்து
மதினாவிற்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள்,
யஜீதை பலவகைகளில் குற்றம் சாட்டினர்.

யஜீத் தொழுவதே இல்லை.
யஜீத் குடிகாரர் என்றெல்லாம் குற்றம் சாட்டினர்.
குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்றும் கூறப்படுகிறது.

மதினாவில் யஜீதை பற்றிய எதிர்ப்பான பிரச்சாரங்களால், மக்களிடையே யஜீதை எதிர்க்கும் மனநிலை வலுக்கிறது.கலகம் செய்ய முயற்சிக்கிறார்கள்.
இதனை அப்துல்லாஹ் இப்னு மத்தியி என்ற தாபி தலைமை ஏற்று நடத்தினார்.
யஜீதின் ஆட்சியில் இருந்து விலக முயற்சித்தார்கள்.

மதினாவில் வசித்த உமைய்யா குடும்பத்தினர் ஆயிரம் பேரையும்,
மதினாவின் ஆளுநரையும், ஒரு இடத்தில் சிறைப்பிடித்து வைத்தார்கள்.

செய்தி யஜீதிற்கு எட்டியது.
சிறைபிடிக்கப்பட்ட
ஆளுநர் மற்றும் உமைய்யா குடும்பத்தினர்களை
விடுவிக்கவும்,

மதினாவில் கலகம் செய்பவர்களை அடக்கவும், உபைதுல்லா இப்னு ஜியாத் உத்தரவில், முஸ்லீம் என்ற வயதான தளபதி தலைமையில் ஒரு படை மதினாவை நோக்கி வந்தது.

மதினாவிற்கு வெளியே “ஹர்ராஹ்” என்ற இடத்தில் நடந்த கடுமையான போரில் நூற்றுக்கணக்கான
நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர்.

மதினாவில் மூன்று நாட்களுக்கு எதுவும் செய்து கொள்ளலாம் என்று படைகளுக்கு
கூறப்பட,

மதினா நகர் சூறையாடப்பட்டது.
ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர்.
பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர்.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
ஒருமுறை “ஹர்ராஹ்”
பகுதிக்கு வந்தபோது
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்று சொல்ல,

அதற்கான காரணம் என்ன என்று உமர் (ரலி) அவர்கள் கேட்க,
ஒருகாலத்தில்
இந்த இடத்தில் ஏராளமான நல்லவர்கள் கொல்லப்படுவார்கள்
என்ற பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பு
பின்னாளில் நடந்துவிட்டது.

அதுபோலவே மக்காவில் அப்துல்லா இப்னு ஜுபைர் அவர்கள் யஜீதை ஏற்க மறுக்க அவர்களையும் கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாங்க ஒரு படை அனுப்பப்பட்டது.

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் அவர்கள் கஃபத்துல்லா பகுதியில் தனது தோழர்களோடு தங்கிக்கொண்டு
கஃபத்துல்லாவை
தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

படை மக்காவிற்கு வந்து அபூ குவைஸ் மலையிலிருந்து
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் அவர்களை தாக்க, “மஞ்சனீக்” என்ற இயந்திரத்திலிருந்து நெருப்பு அம்புகளை வீச அவைகள் கஃபத்துல்லாவின்
சுவர்களை கருக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் அவர்கள் உயிர்தப்பி விடுகிறார்கள்.

அவருடைய குடும்பத்தினர் தோழர்கள் அனைவரும் உமைய்யா படையோடு சேர்ந்துகொள்ள அவர்மட்டும் தனிமை படுத்தப்படுகிறார்.

முஸ்லீம்களின் கிலாபத் வரலாறு முஆவியா (ரலி) அவர்களின் காலத்தில் மன்னராட்சியாக மாறி, யஜீதின் காலத்தில் வலுவாக நிலைபெற்றது.

ஆட்சி அதிகாரங்களை தக்கவைக்க புனிதர்கள் புறந்தள்ளப்பட்டு
அரசியல் வியூகங்கள் வலுவாக வகுக்கப்படுவதால்,
கிளர்ச்சியாளர்களை
ஒடுக்க இதுபோன்ற அரசியல் கொலைகள் வரலாறு நெடுக நடந்து கொண்டே இருக்கிறது.

கஃபத்துல்லா தாக்குதலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே
நான்கே ஆண்டுகள் ஆட்சி செய்த யஜீது மரணமடைந்தார்.

அவரது மகன் இரண்டாவது முஆவியா பதவி ஏற்க மறுத்தார்.
வரலாறு விசித்திரமானது.
அதையும் பேசுவோம்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!