தென்காசி நகராட்சி பகுதிகளில் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்; காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்..

தென்காசி நகராட்சி பகுதிகளில் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்..

தென்காசி நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி 20வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலரும், தென்காசி நகர காங்கிரஸ் துணைத் தலைவருமான M.A. ரஃபீக் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார். தென்காசி நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறி நாய்க்கடியினால் ஏற்படும் பாதிப்பால் பெரியவர்கள், பெண்கள் குழந்தைகள் என அதிகமாக மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாய்களைப் பிடிக்கவும், கருத்தடை செய்யவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவி சந்திரனிடம் 20வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் M.A.ரஃபீக் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையாளர், பொது சுகாதார பிரிவு அலுவலர் மூலம் (விலங்குகள் கருத்தடை) animal birth control அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து மருத்துவர்கள் வரவழைத்து உரிய நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்