Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி தலைமை மருத்துவமனையில் ரூ.50,000 மதிப்புள்ள வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) மருந்துகள் வழங்கல்..

தென்காசி தலைமை மருத்துவமனையில் ரூ.50,000 மதிப்புள்ள வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) மருந்துகள் வழங்கல்..

by Abubakker Sithik

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 50,000 மதிப்புள்ள வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) மருந்துகள் வழங்கல்..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ரூ.50,000 மதிப்பு கொண்ட வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) மருந்துகள் இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், தளிர் கிளினிக் (DEIC) மூலம் குழந்தைகளின் பேச்சுத்திறன், செவித்திறன், வளர்ச்சி குறைபாடுகள் போன்றவை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் கல்லூரணி ஊரைச் சார்ந்த பத்து வயது ராமர் மற்றும் கருத்தப்பிள்ளையூர் ஊரைச் சார்ந்த 13 வயது ஜாய் ஜோஸ்பின் ஆகிய இரு குழந்தைகளுக்கு, தேசிய சுகாதாரப் பணிகள் இயக்கம் (National health mission) மூலம் பெறப்பட்ட சுமார் 50,000 பெருமானம் உள்ள மூன்று மாதத்திற்கான வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) மருந்துகள் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஜெஸ்லின் மற்றும் குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர். கீதா ஆகியோரால் வழங்கப்பட்டது.

இது போன்ற பல சிறந்த மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வபாலா, மருத்துவர் அன்ன பேபி, முஸம்மில், மூத்த பல் மருத்துவர் லதா மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!