Home செய்திகள் செங்கல்பட்டு சென்னை கடற்கரை ரயில்கள் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் அவதி.!! இதன் எதிரொலியாக பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது…

செங்கல்பட்டு சென்னை கடற்கரை ரயில்கள் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் அவதி.!! இதன் எதிரொலியாக பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது…

by Askar

செங்கல்பட்டு சென்னை கடற்கரை ரயில்கள் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் அவதி.!! இதன் எதிரொலியாக பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது…

சென்னை போக்குவரத்தில் முக்கியமாக மின்சார ரயில் போக்குவரத்து உள்ளது. இதில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றன. இந்நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் அல்லது தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு பராமரிப்பு பணியின் போது ஏற்கனவே பயணிகளுக்கு முன்அறிவிப்பு செய்யப்படும். இதன் மூலம் பயணிகள் தங்களின் பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும். இந்நிலையில் இன்று அதிகாலை செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்ல வேண்டிய ரயில் மிகவும் தாமதமாக இயக்கப்பட்டது. வழக்கமாக குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு செங்கல்பட்டில் இருந்து ரயில்கள் அனைத்தும் இயக்கப்படும். ஆனால் இன்று வெகு நேரமாகியும் ரயில்கள் வராததால் பயணிகள் அனைவரும் கடும் அவதி அடைந்தனர். ரயில்கள் தாமதாவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என பயணிகள் குற்றச்சாட்டி உள்ளனர். ரயில்கள் தாமதம் ஆவதால் அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லக்கூடியவர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக ரயில் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ரயில்வே நிர்வாகம் இது போன்ற குறைகளை சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்கள் தொடர்ந்து தாமதம் ஆவதால் பயணிகள் அனைவரும் பேருந்துகளில் பயணம் செய்ய குவிந்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகளவில் இருந்தது. வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் இருந்ததால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!