Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்ட காவல் செய்திகளின் தொகுப்பு..

தென்காசி மாவட்ட காவல் செய்திகளின் தொகுப்பு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்ட காவல் செய்திகள்..

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது..

செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனத்துறை சோதனை சாவடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஆலங்குளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் தங்கராஜ்(59) மீது சார்பு ஆய்வாளர் இளவரசி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2600 மதிப்பிலான 63 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது..

கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கம்பட்டி பகுதியில் கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த புங்கம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் மகன் முருகேசன்(60) மீது சார்பு ஆய்வாளர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 240 மதிப்பிலான 450 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் கடையில் வைத்து புகையிலை விற்பனை செய்த கீழப்பாவூர் மேட்டு தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் ஆறுமுகம்(74) மீது சார்பு ஆய்வாளர் உமா மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2166 மதிப்பிலான 1495 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புளியங்குடியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது..

புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குடி கிழவன் தோப்பு பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட புளியங்குடியை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் என்பவரின் மகன் நூர் முஹம்மது(36), முஹம்மது உசேன் என்பவரின் மகன் காதர் முகைதீன் (55), அப்துல்லா என்பவரின் மகன் சாகுல் ஹமீது(58), முஹம்மது சுல்தான் என்பவரின் மகன் முஹம்மது கனி(63) மற்றும் முகமது என்பவரின் மகன் அப்துல் ரஹீம் (42) ஆகியோர் மீது சார்பு ஆய்வாளர் சஞ்சய் காந்தி வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது..

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 06 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 68 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் பொது இடங்களில் மது அருந்தியதாக 10 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 11 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!