தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை..
கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தபாஞ்சான், தாழையூத்து மற்றும் ராம்நகர் பகுதிகளில் பேட்டரிகள், மின் வயர்கள், நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் ஆடுகள் என தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P. சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் கடையம் காவல் துறையினர் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
மேற்படி குற்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்த சுடலைஒளிவு @சுடலை (36) மேலக்குத்தப்பாஞ்சான், பரமசிவன் (36) மலையான்குளம், முருகன் (44) அம்மன் கோவில் தெரு மேலக்குத்தப்பாஞ்சான், இசக்கிராஜ் (34) தெற்குத்தெரு மேலக்குத்தப்பாஞ்சான், மாடக்கண் செல்வம்(28) தெற்குத்தெரு மேலக்குத்தப்பாஞ்சான் ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து தென்காசி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.