Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்களவை பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் இருசக்கர வாகன பேரணியும், மனிதச்சங்கிலி பேரணியும், ஆய்க்குடி பேரூராட்சியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழி எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியும், தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர்கள் விழிப்புணர்வு கோலங்கள் வரைதல் நிகழ்ச்சியும், கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியும், முந்தைய தேர்தலில் (2019) குறைவான வாக்குப்பதிவு உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை அதிகரிப்பதற்காக கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பழங்குடியின வாக்காளர்கள் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும், செங்கோட்டை வட்டார பொதுமக்கள் தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்து உறுதி மொழி எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியும், சங்கரன்கோவில் வட்டார பொதுமக்கள் தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் வரைதல், தெருக்களில் விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சியும், குருவிகுளம் வட்டார பொதுமக்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலங்கள் வரைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியும், கீழப்பாவூர், பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் தெருக்களில் விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாநில அளவில் சராசரிக்கு குறைவாக வாக்குச்சாவடிகளில் தினந்தோறும் உள்ள 50 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவினை அதிகரிப்பதற்காக ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ரங்கோலி வரைதல், உறுதிமொழி ஏற்றுக்கொள்ளுல், மற்றும் கையெழுத்து இயக்க முகாம்கள் நடைபெற்று வருகிறது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!