தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை; 26 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு..
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் நடந்தது. இதில் 37 வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 11 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு 28.03.2024 அன்று வேட்பு மனு பரிசீலனை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி 37 (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா, தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 20.03.2024 முதல் 27.03.2024 வரை நடைபெற்றது. வேட்புமனு தாக்கலின் போது 29 வேட்பாளர்கள் 37 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை நேற்று நடைபெற்றது. பெறப்பட்ட 37 வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 11 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் 19 வேட்பாளர்கள் போட்டியிட தகுதியானவர்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.