Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் நடந்த மகளிர் தின விழா; பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திட விழிப்புணர்வு..

தென்காசி மாவட்டத்தில் நடந்த மகளிர் தின விழா; பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திட விழிப்புணர்வு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் நடந்த மகளிர் தின விழா; பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திட விழிப்புணர்வு..

தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், கொடிகுறிச்சி, USP தனியார் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் தின விழா (08.03.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் கை அச்சு விழிப்புணர்வு மற்றும் மகளிர் லோகோவை தத்ரூபமாக நிறுவப்பட்டு, மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி மாவட்ட முதல் நிலை பெண் அலுவலர்களுக்கு தென்காசி தாரகை பெண்கள் விருதும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு விருதுகளையும் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்ற உணவுத் திருவிழா, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், தூய்மை பணியாளர்களுக்கான போட்டிகள் உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின பெண்கள் முன்னேற்றத்திற்காக புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் சுய தவிக் குழுக்கள், இலவச பேருந்து பயணம், உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கல்லூரி மாணவிகள் ஜனநாயக கடமையாற்றி தங்களது வாக்குரிமையை செலுத்த வேண்டும். மேலும் தமிழக அரசால் பெண்கள் முன்னேற்றத்திற்கு செயல்படுத்தப்படும் அனைத்து பெண்களும் தங்களது இலக்கை நிர்ணயித்து விடாமுயற்சியுடன் முயன்று பல்வேறு நிலைகளை அடைந்திட வாழ்த்துகிறேன் என அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்களை கூறினார்.

தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கவும், பெண்கள் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருக்கும் வகையில் கை அச்சு இயக்க விழிப்புணர்வை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சமூக நல அலுவலர் செல்வி மதிவதனா ஆகியோர் அச்சுக்களை வைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பெண்களுக்கான அடையாள லோகோவை தத்ரூபமாக நிறுவப்பட்ட லோகோவுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கல்லூரி மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார். மேலும் பெண்கள் தினத்தினை முன்னிட்டு கேக்குகள் வெட்டப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுடன் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்துறை) கனகம்மாள், திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்) ஜோஸ்பின் சகாய பிரமிளா, மாரியம்மாள் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், ஜெயபாரதி மாலதி துணை இயக்குநர்.(தோட்டக் கலைத்துறை), பத்மாவதி மற்றும் மாவட்ட அதிகார மாயா பணியாளர்கள், சகி ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள் மற்றும் USP கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!