புளியங்குடி மலைப் பகுதியில் இறந்து கிடந்த முதியவரின் உடல் மீட்பு; உதவும் பணியில் தமுமுகவினர்..
புளியங்குடி மலைப் பகுதியில் இறந்து கிடந்த முதியவரின் உடலை தமுமுகவினர் மீட்டனர். தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 60 வயதான கோபால் என்ற முதியவர் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக காணவில்லை என்ற செய்தி வெளியானது. பின்பு நான்கு நாட்களுக்குப் பிறகு புளியங்குடி மேற்கு பகுதியில் வீரமுடையார் கோவில் அருகே உள்ள மலை அடிவாரத்தில் கிடப்பதாக அங்குள்ள விவசாயிகள் தென்காசி மாவட்ட தமுமுக செயலாளர் எம் எஸ் அப்துர் ரஹ்மானுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு விரைந்த காவல்துறை அதன் பிறகு தமுமுக மருத்துவ சேவையை அணுகியது. பின்பு அங்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு அமரர் உறுதியில் உடல்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.