Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் மல்லிகை சாகுபடி குறித்த கருத்தரங்கு..

தென்காசி மாவட்டத்தில் மல்லிகை சாகுபடி குறித்த கருத்தரங்கு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான மல்லிகை சாகுபடி குறித்த கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான மல்லிகை சாகுபடி குறித்க கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தாவது, பாரம்பரிய மலர்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மல்லிகை மலராகும். தமிழ் கலாச்சாரத்தில் சங்ககாலம் தொட்டு முக்கியமானதாக கருதப்படுகின்றது. மல்லிகை மலரானது இந்தியா, தாய்லாந்து, சீனா, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வணிக ரீதியாக பயிரிடப்படுகின்றது.

மல்லிகை இனத்தில் 200க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. இந்தியாவில் 50 வகையான மல்லிகை இனங்கள் வளர்கின்றன. இவற்றில் குண்டுமல்லி, முல்லை, பிச்சி, சாக்கடா போன்றவை வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றில் குண்டுமல்லி, முல்லை பூக்களாக விற்பனை செய்யப்படுகின்றது. மல்லிகை மற்றும் மல்லி வாசனை எண்ணெய் பிரித்து எடுப்பதற்காக பயிரிடப்படுகிறது. இந்திய அளவில் மல்லிகை மலர் சாகுபடியில் தமிழகமானது 9360 ஹெக்டேர் பரப்பில் 77.247 மெட்ரிக் டன் மல்லிகை உற்பத்தியுடன் முதல் இடத்தில் உள்ளது.

தமிழகத்தின் தென்காசி உட்பட மதுரை, தருமபுரி, திருவள்ளூர், சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மல்லிகை மலர் உற்பத்தி செய்யப்படுகின்றது. குறிப்பாக, நமது மாவட்டத்தில் சுமார் 1400 ஏக்கர் பரப்பில் மல்லிகை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே, மல்லிகை உற்பத்தியை அதிகரிப்பதற்காக தமிழக அரசு சிறப்பு திட்டமாக இவ்வாண்டு மல்லிகை தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தை 7 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு இந்த ஆண்டு (2023-2024) முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் மூலம் மலர் உற்பத்தியைப் பெருக்குதல், உரம் மேலாண்மை, பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானிய விபரங்கள், சொட்டு நீர்ப் பாசனம், மல்லிகை பரப்பு விரிவாக்கம் செய்தல், மல்லிகை மறு நடவு செய்தல், நடமாடும் வண்டி விநியோகம், நெகிழி கூடைகள் விநியோகம், குளிர்பதனப் பெட்டி விநியோகம், குளிர் காலத்தில் மல்லிகை உற்பத்தி முறைகள் குறித்து பயிற்சி உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாக 450 பயனாளிகளுக்கு மானிய தொகையாக ரூபாய் 53 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விவசாயப் பெருமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!