கட்டுமான பொருட்களின் அதிகப்படியான விலை உயர்வை கண்டித்து பழனி நகர பொறியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
தமிழகம் முழுவதும் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது.
முன் விற்பனை செய்ததில் இருந்து தற்போது வரை எம்.சாண்ட் ஒரு யூனிட் 2700 இல் இருந்து 4000 ருபாயாகவும்,பி.சாண்ட் 3700 இல் இருந்து 5000 ருபாயாகவும் , மேலும் ஜல்லி,கிரசர் மண் ,வெட்மிக்ஸ் ,டஸ்ட் உள்ளிட்ட பொருட்கள் 50% முதல் 100% வரை கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக விலை உயர்ந்து உள்ளதை கண்டிக்கும் விதமாக பழனி நகர பொறியாளர் சங்கத்தினர் பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய ,மாநில அரசுகளை கடுமையான விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பழநி- ரியாஸ்
You must be logged in to post a comment.