Home செய்திகள்உலக செய்திகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கினர்..

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கினர்..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு 55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்..

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 3015 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55 கோடியே 63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பிப்.08 அன்று வழங்கியதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காணொலி காட்சி வாயிலாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு 3015 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55 கோடியே 63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.தி.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு வாழ்வாதார ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கமானது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு பெண்களுடைய சமூக, பொருளாதார திறன் மேம்பாட்டினை தொடர்ந்து, 2021 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கான வலுவான உயிரோட்டத்தின் கூடிய மக்கள் அமைப்புகளை உருவாக்கி, நிதி சார்ந்த மற்றும் நிதிசாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தை பெருக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தென்காசி மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 5445 சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புறங்களில் 3218 மகளிர் சுய உதவிக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் மொத்தம் 1,12,619 பெண்கள் உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வங்கி கடனுதவிகள் பெற்றுத் தரப்பட்டு, அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யப்படுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் ஈரோடு மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின்வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சி காணொளி வாயிலாக தென்காசி மாவட்டத்தில் ஒளிபரப்பப்பட்டு தென்காசி மாவட்டத்தினைச் சார்ந்த 565 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.44 கோடியே 50 இலட்சம் தொகை வங்கி கடனாகவும், 3 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மதி எக்ஸ்பிரஸ் மின்வாகனங்களும், இணை மானியத் திட்டத்தின் மூலம் 28 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.13 இலட்சத்து 50 ஆயிரமும், வட்டார அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்பு மூலம் 2447 சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 3015 சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தி.உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லாலா சங்கரபாண்டியன், மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி. மதிவதனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், மாவட்ட தொழில் மையம் மேலாளர் மாரியம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கனகம்மாள், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், உதவி திட்ட அலுவலர்கள் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!