ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அடி, மஹாளய மற்றும் தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது . அதான்படி தை அமாவாசையை யொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து யாத்திரைகள் ராமேஸ்வரம் வருகை புரிந்து அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தன்னுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு, பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்த பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலால் பல மணி நேரம் திருக்கோவில் வளாகத்திற்குள் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திருக்கோயில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கபட்டது. கோவிலின் நான்கு ரத வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக் கப்பட்டது. கோவில் நுழைவு வாயிலில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின் கோவிலுக்குள அனுமதிக்கப் படுகின்றனர். மேலும் கூட்ட நெரிசலான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீசார்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் ராமேஸ்வரம் வந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது. கார் பார்க்கிங்கில் இட நெருக்கடியால் ராமேஸ்வரம் நுழைவு வாயிலுக்கு வெளியே சுமார் மூன்று கி.மீ தூரம் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். தெருக்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் உள்ளூர் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் மதுரை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
48
You must be logged in to post a comment.