தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக “பேட்டி பச்சோ பேட்டி பதோ” திட்டத்தின் கீழ் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு Slogan writing, Posters, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக “பேட்டி பச்சோ பேட்டி பதோ” திட்டத்தின் கீழ் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி ஐசிஐ அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வைத்து Slogan writing, Posters, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. அனைத்து பள்ளி மாணவிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் விழிப்புணர்வு முகாம், போட்டிகள், மரக்கன்று நடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 24 அன்று பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. எனவே, பெருந்திரளான பெண் குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.