Home செய்திகள் இராமநாதபுரம் அருகே  அம்மன் கோயில் 19 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா..

இராமநாதபுரம் அருகே  அம்மன் கோயில் 19 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.4- இராமநாதபுரம் அருகே தியாகவன்சேரி முத்துமாரிஅம்மன் கோயில் 19-ஆம் ஆண்டு முளைப்பாரி விழா செப்.26 ல் காப்பு கட்டுடன் தொடங்கியது. இதையொட்டி ஆடவர் ஒயிலாட்டம், மகளிர் கும்மியாட்டம் தினமும் இரவு நடந்தது. ஊருணி கரையில் அம்மன் கரகம் நேற்றிரவு புறப்பட்டு மேள தாளம், தப்பாட்டம், வாண வேடிக்கை வானில் வர்ண ஜாலம் காட்ட ஊர்வலமாக கோயில் வந்தடைந்தது. அங்கு தீபாராதனை காட்டப்பட்டது. இன்று காலை அம்மன் கரகம்பக்தர்களின் தரிசனத்திற்காக வீதி உலா சென்றது. இதை தொடர்ந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாலை 5 மணியளவில் ஒயிலாட்டத்திற்கு பிறகு அம்மன் கரகம் முன் செல்ல முளைப்பாரி சுமந்து பெண்கள் ஊர்வலம் சென்றனர். தியாகவன்சேரி கிராம மக்கள், முத்துமாரியம்மன் ஆலய வஸ்தாவிகள் மாப்பிள்ளைசாமி, சாத்தையா மற்றும் ரவி, தர்மலிங்கம் உள்ளிட்ட விழாக்குழுவினர், விழா ஏற்பாடுகளைசெய்தனர். அக்.10 ஆம் தேதி குளுமை பொங்கல் விழா நடைபெற உள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com