Home செய்திகள் இராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை    சக்தி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! 

இராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை    சக்தி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! 

by ஆசிரியர்

இராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை சக்தி முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது . கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு  24.11.18மாலை   6 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் தொடங்கியது.

அன்றைய தினம் விநாயகர் பூஜையை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 25.11.18  காலை 7.30 மணிக்கு   இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது . கும்பாபிஷேக விழா காலை 9 மணிக்கு  கடம் புறப்பாடு நடந்தது. வேதவிற்பன்னர்கள்     புனித நீர் கொண்ட குடத்தை    தலையில் சுமந்து கோபுரம் சென்றனர்.  வானில் கருடபகவான் வட்டமிட வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை தொடர்ந்து  சக்தி  முத்துமாரியம்மனுக்கு   சிறப்பு பூஜைகள் நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.  சுப்புத்தேவன்வலசை கிராம மக்கள் விழா ஏற்பாடுகளா செய்திருந்தனர். விழாவில் கோயில் பூசாரிகள் சண்முகநாதன், முத்துராமலிங்கம், சுப்ரமணியன், அய்யப்பன் கோயில் குருசாமி சேகர், அர்ச்சுனன், முருகானந்தம், பழனிக்குமார், காட்டூரணி கூட்டுறவு வங்கி தலைவர் இராஜேந்திரன், திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக தலைவர் உடையத்தேவன், தெற்குத் தரவை ஊராட்சி அதிமுக செயலர் சோமசுந்தரம், கிளை அதிமுக செயலர்கள். திருமுருகன், மோகன், அமமுக பிரமுகர்கள் மோகன், நடராஜன் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!