மாற்று சிந்தனை – கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற அல்-பையினா பள்ளி நிர்வாகம்..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், பல கல்வி நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் இருந்தும் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உதவியாக தினமும் அனுப்பபட்டு வருகிறது.

இந்த நற்பணியும் படிக்கும் பிள்ளைகளுக்கு படிப்பினையாக அமையும் விதமாக கீழக்கரை அல் பையினா பள்ளி நிர்வாகம் நிவாரணத்திற்காக பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொருட்களை பள்ளியின் மாணவர்களும் மக்களின் பாதிப்புகளை அறிந்து கொள்ளும் வண்ணமாக மாணவர்கள் மூலமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

இது சம்பந்தமாக பள்ளியின் தாளாளர் கூறுகையில், இப்பொருட்களை மாணவர்கள் மூலமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியதின் மூலம் அவர்கள் செய்த உதிவியின் அடிப்படை காரணம், அப்பொருட்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை சென்றடைந்தது மற்றும் அப்பகுதியின் பாதிப்புகளை நேரடியாக காண்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கும் உதவும் குணமும் வளர வாய்ப்புள்ளது. அதே சமயம் இச்செயல்பாட்டுக்கும் மாணவர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல ஒத்துழைப்பும், வரவேற்பும் கிடைத்தது.. என்றார்.

நிச்சயமாக நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டையும் வளரும் சமுதாயத்தினருக்கு பாடமாகவும், நம் செயல்பாட்டையே உதாரணமாகவம் அமைத்துக் கொள்வது பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல், கல்வி கற்றுக் கொடுப்பவர்களின் கடமையும் என்பது இது ஒரு உதாரணமாகும்.