Home செய்திகள் உச்சிப்புளி அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்..

உச்சிப்புளி அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் செப்.10- இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பூமாலை வலசை கிராமத்தில் வரம் தரும் செல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், யாக பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நேற்று மாலை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை அம்மன் பாடல்களுடன் யாக பூஜைகள் நடந்தன. இதன் பின்னர் கடங்கள் புறப்பாடாகி கோபுரம் சென்றடைந்தன. இதன் பின்னர் கருட பகவான் வானில் வட்டமிட பூஜிக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு, பால், தயிர், மோர் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தன. இதில் மண்டபம், பிரப்பன் வலசை, உச்சிப்புளி, ரெகுநாதபுரம், வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் கோட்டை வேல், கோயில் குழு தலைவர் முனியசாமி, செயலர் ரவி(எ) சுப்ரமணியன், பொருளாளர் கோட்டைச்சாமி, பூசாரி கோட்டைச்சாமி மற்றும் வீர சைவ ஆண்டி பண்டார சமூகத்தார் ஏற்பாடு செய்தனர்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!