தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 31வது மாணவப் பேரவை நிறைவு விழா..

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 31வது மாணவப் பேரவை நிறைவு விழா இன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி கருத்தரங்கத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் துவங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் எஸ்.சுமையா வரவேற்புரை வழங்கினார்.

பின்னர் 2018-19 ஆண்டிற்குரிய மாணவப்பேரவை பொறுப்புக்களை 2019-20 ஆண்டிற்கான பொறுப்பாளர்களிடம் மாணவிகள் ஒப்படைத்தனர். மதுரை எம்.எஸ். செல்லமுத்து மனநல மறுவாழ்வு மையத்தின் முதல்வர் திரு. ஜி.குருபாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இன்றைய சூழ்நிலையில் மாணவிகள் அலைபேசியை கவனமாகக் கையாள வேண்டும் என்ற கருத்துக்களோடு சிறப்புரையாற்றினார். மேலும் இவ்விழாவில் கல்லூரி செயலாளர் அல்ஹாஜ் காலித் ஏ.கே. புஹாரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

சிறப்பாக நிகழ்ந்த இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள், தேர்வு நெறியாளர்கள் கலை மற்றும் அறிவியல் புலமுதன்மையர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துக் கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் அல்ஹாஜ் சேக் தாவூதுகான் மற்றும் மாணவப் பேரவையினரும் செய்திருந்தனர். விழா இனிதே நிறையுற்றது.