கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி சார்பாக ஏர்வாடியில் விழிப்புணர்வு பேரணி..

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி நிர்வாகம்  நாட்டு நலப் பணித் திட்டம் மூலம் பல சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணிகள் நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று சின்ன ஏர்வாடி பகுதியில் சீமக் கருவேல மரங்களின்  தீமைகளை விளக்கும் விதமாக கல்லூரி மாணவிகள் பதாகைகளை ஏந்திய வண்ணம் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றார்கள். அதே போல் நாட்டு நலப் பணித் திட்டத்தின் குழுக்கள், ஏர்வாடி தர்ஹாவும் கல்லூரி மாணவிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.