
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பில் விதிக்கப்படும் வரிகளை கட்டுவதற்காக தினம்தோறும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை சென்று வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வண்ணம் நகராட்சி ஆணையாளரின் உத்தரவின்படி வீட்டு வரி, தொழில் வரி, தண்ணீர் வரி போன்ற நகராட்சிக்கு செலுத்தப்படும் வரிகளை கட்டுவதற்காக சிறப்பு முகாம் கீழக்கரை 3,4 வார்டுகளில் நடைபெற்று வருகிறது.
இதை பொதுமக்கள் பயன்படும் வகையில் இருப்பதாக அப்போது அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இதேபோல் அனைத்து வார்டு பகுதிகளில் நடைபெறும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது
You must be logged in to post a comment.