பாலியல் குற்றத்திற்கு தூக்கு தண்டனை அளவிற்கு கடுமையான தண்டணை கொடுக்க வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தல்…

கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் மற்றும் கயத்தார் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கட்சி நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி விட்டு கயத்தாரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது,இந்த கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும், நாற்பதும் நாமதே, நாளையும் நாமதே என்ற அளவில் வெற்றி பெறும், இன்றைய காலகட்டத்தில் இந்த கூட்டணியில் குழப்பம் விளைவிக்க பல பேர் முயற்சி செய்கின்றர்கள், அதில் தோற்றுதான் போவார்கள்,பொள்ளாச்சி சம்பவம் எல்லோரும் மனதினையும் உருக்கி கொண்டு இருக்கிறது, இது தொடர்பான வழக்க சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருவதை படித்தேன், அப்படி மாற்றப்பட்டு இருந்தால் உண்மையில் வரவேற்க்கதக்கது. பாலியல் செயலில் ஈடுபட்டவர்கள் எந்த குடும்பத்தினரைச் சேர்ந்து இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்தவறு செய்தவர்களின் பெற்றோர்கள், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள வரவேற்க்ககூடியது, பெண்கள் பாதுகாக்கப்படவேண்டும், அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறுவதற்கு அத்துணை முயற்சி செய்ய வேண்டும்,பாலியல் குற்றத்திற்கு தூக்கு தண்டனை அளவிற்கு கடுமையான தண்டணை கொடுக்க வேண்டும் என்றார் அவர் .