Home செய்திகள்உலக செய்திகள் இராமநாதபுரம் வருகை புரிந்த ஆளுநர் கண்டித்து கருப்பு கொடி காட்டி கண்டன போராட்டம் !

இராமநாதபுரம் வருகை புரிந்த ஆளுநர் கண்டித்து கருப்பு கொடி காட்டி கண்டன போராட்டம் !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாட்டின் ஆளுநர் R.N ரவி ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகையை முன்னிட்டு ஆளுநருக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னணி சார்பில் பெரியார் பேரவையின் தலைவர் நாகேசுவரன் தலைமையில் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாவெல் முன்னிலையில் கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக மக்கள் முன்னணி மணிமாறன், பெரியார் பேரவையின் காளிதாஸ் செல்வம், வரதன், நித்திஷ், சாம் செல்வராசு ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினார். ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு , மாநிலங்களுக்கு ஆளுநர்களே தேவையில்லை , ஆளுநர் என்கிற அதிகார அமைப்பை ஒழித்துக் கட்டுவோம், உள்ளிட்ட கோசங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் கூறுகையில் :- அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பேசியும் செயல்பட்டும் வருகிறார். சமீப காலமாக பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் செல்லும் போது வள்ளலார் சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்றும், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்லாமல் தமிழகம் என்பதே சரி என்றும், தமிழ்நாடு அரசே ஏற்க மறுக்கிற தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை ராமஜென்ம பூமி என்றும் உண்மைக்கு புறம்பாக பேசுவதோடு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்துகிறார் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கும், சட்டத்திற்கு விரோதமாகவும் தனி அரசாங்கத்தை நடத்த நினைக்கும் ஆளுனரின் இச்செயல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது என்றனார். இப்போராட்டத்தில் சிவகங்கை திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்டச் செயலாளர் பெரியார் முத்து ,ஆதித்தமிழர் கட்சி மண்டலச் செயலாளர் க .பாஸ்கரன், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், ஆதித்தமிழர் மாவட்ட செயலாளர் உதயகுமார் , இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் தமிழ்மாறன் , செங்கொடி , தமிழக மக்கள் முன்னணி இலங்கேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com