Home செய்திகள் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி..

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.26 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 512 பேரிடம் மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு நிவாரணத் தொகை இருவருக்கு தலா ரூ.1லட்சம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், 2 பேருக்கு விலையில்லா சலவை பெட்டி என 9 பேருக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com