Home செய்திகள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: கால்நடை ஆய்வாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: கால்நடை ஆய்வாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.26 –

தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாநில செயற்குழு முடிவின்படி 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மகளிரணி மாவட்ட செயலாளர் கே.பூபதி, தலைமை வகித்தார். கோட்ட செயலாளர்  பாஸ்கரன்,  மாவட்ட இணை செயலாளர்கள் மு.முனிஸ்வரி,  நா.கங்காதேவி முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் அழகர் வரவேற்றார்.  கால்நடை பராமரிப்பு துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கால்நடை ஆய்வாளர் நிலை-1 மற்றும் கால்நடை மருத்துவ முதுநிலை மேற்பார்வையாளர்களுக்கு 6 வது ஊதிய குழு ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கால்நடை மருத்துவ முதுநிலை மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் கரு.முத்துச்சாமி பேசினார். தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.சேகர் நிறைவுரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். முருகேஸ்வரி, தமிழ்நாடு கருவூல கணக்கு துறை மாவட்ட செயலாளர் எம்.ஜெனிஸ்டர் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் எம்.ரோஸ்நாராபேகம்,  பொதுப்பணிதுறை நிர்வாக அலுவலர் சங்கம் மாநில அமைப்பாளர் அப்துல் நஜ்முதீன், தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.பாலுச்சாமி, தமிழ்நாடு நெடுஞ்சாவைதுறை ஊழியர்கள் சங்க மண்டல செயலாளர் சா.பவுல்ராஜ்,  தமிழ்நாடு கல்விதுறை நிர்வாக அனுவலர்கள் சங்கம் மாவட்ட தலைவர் பி.முனியேஸ்வரன்,  பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர் சங்க மாவட்ட தல்லவர் சரவணன்,  சாலை ஆய்வாளர் சங்க மாவட்ட தலைவர்  பி.அனந்த சேகரன்,  ஊரக வளர்ச்சி மாவட்ட தலைவர் எம்.முனிஸ் பிரபு,  சாலை பணியாளர்கள் சங்க  மாவட்ட தலைவர் எஸ்.பாண்டி,  புள்ளியியல் துறை  மண்டல துணை தலைவர்  எம்.சுரேஷ்குமார்,  நில அளவு ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் டி.வினோத்குமார், அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் எம்.திருமுருகன், சாலைப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர்  பசோனிகா உள்பட பலர் பங்கேற்றனர். கால்நடை ஆய்வாளர் க.சாத்தையா நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!