இராமநாதபுரம் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி : தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வீர ராகவ ராவ் தகவல்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் தசைச்சிதைவு நோய், பக்கவாதத்தால் முதுகு தண்டுவடம் பாதிக த்து 2 கை, கால் செயலிழந்து தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்வோர், பணிபுரிவோர் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளன. எஞ்சிய சிறப்பு சக்கர நாற்காலிகளை தேவையின் அடிப்படையில் 60 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் ஆண்கள், 55 வயதிற்குட்பட்ட  மாற்றுத்திறன் பெண்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த சிறப்பு சக்கர நாற்காலிகள் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.