100நாள் வேலையின் சம்பளம் வாங்கும் முன்பே பெண் மயங்கி விழுந்து பலி..

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி பணிகள் நடைபெறுவதுண்டு. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நிலையில் உள்ள மக்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

இதன் அடிப்படையில்  சென்னையில் உள்ள ஊரப்பாக்கம் அடுத்த மண்ணிவாக்கம், அண்ணா அம்பேத்கர் நகரை சேர்ந்த பாஸ்கரின் மனைவி பார்வதி(45) என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சுவாமி விவேகானந்தா நகரில் பணி புரிந்து வந்தார்.  அங்குள்ள குளம் தூர் வாரும்போது, இன்று மதியம் திடீரென மயங்கி கீழே விழுந்து பலியானார்.

#Paid Promotion