முறையான நீர் மேலாண்மை இல்லாததால் குடிநீர் வீணாகிறது.. மறுபுறம் ஆண்டிபட்டி அருகே தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இல்லை என்று ஆண்டிப்பட்டி ஊராட்சி அலுவலகம் எதிரில் சாலை மறியல் செய்தனர். இச்சம்பவத்தை ஒட்டி போலீசாருக்கும் பொதுமக்களுக்கும்  தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மணிநேரம் தேனி மதுரை மெயின் ரோடு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணம்  ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈடுபாடு இல்லாததால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் ஆண்டிபட்டிக்கு நிரந்தர டிஎஸ்பி இல்லாமல்,  சட்டம் ஒழுங்கும் சீர் கெட்டு உள்ளது. மேலும் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் தண்ணீர் பிரச்சினைக்காக தினசரி மறியல் செய்து வருகின்றனர். இப்பிரச்சினைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

———————————————————————