ஜாதியைச் சொல்லி திட்டி தாக்கிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை …

இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் அருகே வெங்கடகுறிச்சியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி, 59. இவர் கடந்த 2016 அக்டோபர் 20 ம் தேதி இராமநாதபுரத்தில் இருந்து அரசு பஸ்சில் வெங்கடகுறிச்சி சென்றார். வெங்கடகுறிச்சி நிறுத்தும் போது, படியில் நின்று கொண்டிருந்த பொசுக்குடியைச் சேர்ந்த காதர் வெள்ளை மகன் முத்துராமலிங்கத்தின் காலை மிதித்து விட்டார். இது தொடர்பான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வேலுச்சாமி, முத்துராமலிங்கத்தை தாக்கினார்.

இதையடுத்து வீடு திரும்பிய முத்துராமலிங்கம் அவரது அண்ணன் பிரபாகரனுடன் சென்று வேலுச்சாமியை தாக்கினர். தன்னை ஜாதியைச் சொல்லி திட்டி தாக்கியதாக வேலுச்சாமி புகாரின் படி பிரபாகரன் (22), முத்துராமலிங்கம் (17) இருவரையும் கீழத்தூவல் போலீசார் கைது செய்தனர். இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். முத்துராமலிங்கம் மைனர் என்பதால் இளைஞர் நீதி குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த வழக்கின் இறுதி விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கயல்விழி ஜாதியை சொல்லி திட்டியதற்காக பிரபாகரனுக்கு 5 ஆண்டுகள், காயம் ஏற்படுத்தியதற்காக 2 ஆண்டு சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவவிக்க வேண்டும், ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்

———————————————————————-