கீழக்கரையில் மீண்டும் உருவெடுக்கும் நாய்கள் பிரச்சினை – நகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்..

கீழக்கரை நகராட்சி பகுதிகளில் மீண்டும் நாய்களின் பிரச்னை உருவெடுக்க துவங்கியுள்ளது. குறிப்பாக பெத்தரி தெரு கஸ்டம்ஸ் ரோடு பகுதி புது கிழக்குத் தெரு மேலத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் திடீரென நூற்றுக்கணக்கில் வெறியுடன் சுற்றித் திரிகிறது

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சாலை தெரு பகுதியில் இருந்து நாய் கடிக்கு நான்கு வயது சிறுவனை இழந்தோம். அதன் பிறகு சமூக அக்கறை கொண்டவர்களின் பெரிய போராட்டத்திற்கு பிறகு விழித்துக் கொண்ட நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து நடவடிக்கை எடுத்தது.

ஆனால் அந்த சம்பவம் நடந்து சில வாரங்களிலேயே மீண்டும் ஒரு பெண்மணி நாய் கடிக்கு ஆளாகி உரிய சமயத்தில் சமூக ஆர்வலர்களால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்ற பட்டார்.

இது சம்பந்தமான செய்தியும் நம் கீழை நியூஸ் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தோம்.  அதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்களின் தொடர் முயற்சியால் நாய்கள் நகராட்சியால் பிடிக்கப்பட்டது, ஆனால் மீண்டும் தலை தூக்கியுள்ள நாய் தொல்லை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  நகராட்சி நிர்வாகம் அடுத்த அசம்பாவிதம் நடக்கும் முன்பு விழித்துக்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமா??

2 Comments

  1. இத்தனை தொடர் வலியுறுத்தலுக்குப் பின்னரும் நாய்களின் “குரைப்பைக்” குறைக்க கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்னவோ?

  2. பொறுப்பற்ற நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் முற்றுகையிட வேண்டும். மற்ற சமுதாய மக்கள் போல் தெருவில் இறங்கினால்தான் தீர்வு கிடைக்கும்.

1 Trackback / Pingback

  1. கீழக்கரையில் நாய் கடித்து இறந்து போன சிறுவனின் வீட்டு அருகே அதே நாய் மீண்டும் சுற்றுவதால் பொத

Comments are closed.