ஸ்டெர்லைட் ஆலைக்கு தடைவிதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை இனிப்பு வழங்கி கொண்டாடிய வைகோ..வீடியோ..

18.02.19 இன்று காலை தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை தூத்துக்குடி பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் வரவேற்றுள்ளனர். அந்த வகையில் உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பினை வரவேற்கும் முகமாக தஞ்சையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மதிமுக தலைவர் வைகோ அவர்கள் பத்திரிகை ஊடக நிருபர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்