வைகை ஆற்றில் புதைத்து வைக்கப்பட்ட 8 சாமி சிலைகள் கண்டுபிடிப்பு…வீடியோ..

பரமக்குடி வைகை ஆற்று மணலுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, சரஸ்வதி, உள்ளிட்ட 8 சாமிகளின் கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, காக்கா தோப்பு வைகை ஆற்றில் ஒரு அடி முதல் 3 அடி உயரம் வரையிலான பெருமாள், பூதேவி, ஸ்ரீ தேவி, சரஸ்வதி உள்ளிட்ட 8 சாமிகளின் கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்து. வைகை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீரால் மண்ணுக்குள் புதைந்திருந்த சிலைகள் வெளியே தெரிந்ததை அவ்வழியே சென்ற சிலர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் பரமக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சதீஷ் குமார் மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதிக்கு சென்று சிலைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சிலைகள் ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரையிலான இந்த 8 சாமி சிலைகளும் அருகில் உள்ள ஏதோ ஒரு கிராமப்பகுதியில் கோவில் நிர்மானத்திற்கு முன்பு ஆற்று மணலுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சிலைகளை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.