கீழக்கரை கடைத்தெருக்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்.. கூடுதல் சமயம் கேட்டு வியாபாரிகள் கோரிக்கை..

கீழக்கரையில் உள்ள முக்கிய கடைத் தெரு பகுதியில் இன்று (22/00/2018) நகராட்சியினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை தொடங்கினர்.

இதில் முக்கியமாக பொது இடங்களில் உள்ள பாதையை ஆக்கிரமித்து மேற் கூரையாகவும், மேடை அமைத்தும் கடைகளை வைத்திருந்த பகுதிகளை அகற்றினர்.  இப்பணியின் போது காவல்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

திடீரென இடிக்க தொடங்கியதால், அப்பகுதி வியாபாரிகள் கூடுதல் அவகாசம் கேட்டனர்.  பின்னர் எழுத்து மூலமாக பெற்றுக்கொண்டு, அவகாசம் தாண்டியும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.