Home செய்திகள் செங்கம் அருகே கரோனா வைரஸ் ஒழிய ஊர்மக்கள் தீச்சட்டி எடுத்து சிறப்பு பூஜை

செங்கம் அருகே கரோனா வைரஸ் ஒழிய ஊர்மக்கள் தீச்சட்டி எடுத்து சிறப்பு பூஜை

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் ஊராட்சி கௌதம் நகரில் கரோனா வைரஸ் வெளிய ஊர் மக்கள் தீச்சட்டி எடுத்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தினர.கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ளோர் கொரோனாவிலிருந்து விடுபட சிறப்பு பூஜைகள், மந்திரங்களை ஓதுதல், அபிஷேக ஆராதனைகளை நம்பிக்கையோடு செய்து வருகின்றனர்.இந்நிலையில், செங்கம் அடுத்த இறையூர் ஊராட்சி கௌதம் நகர் காளியம்மன் கோயிலில் கொரோனா வைரஸ் அழியவும், உலக மக்கள் நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு நன்மையோடு வாழ வேண்டியும் ஊர் பொதுமக்கள் சிறப்பு பூஜை மற்றும் தீச்சட்டி எடுத்து வழிபாடு நடத்தினர். இதில், யாகம் கரோனா வைரஸ் ஒழிய சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு , பின்னர்தீச்சட்டி அக்னியில் கொரானா வைரஸ் போன்ற உருவ பொம்மை உருவாக்கி அதனை ஊர் மக்கள் எடுத்து ஊர் முழுவதும் ஒவ்வொரு வீதியாக சென்று எல்லை வரை சென்று பூஜைகளை முடித்தனர். இந்நிகழ்வில் அப்பகுதியில் சிறிய பரபரப்பு காணப்பட்டது.இதுகுறித்து ஊர் பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது;கொரோனா வைரஸ் அழியவும், உலக மக்கள் நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு நன்மையோடு வாழ சிறப்பு பூஜைகள் மற்றும் தீச்சட்டி எடுத்து பிரார்த்திக்கிறோம். ஒரு காலகட்டத்தில் காலரா நோயினால் பல உயிர்களை இழந்துள்ள நிலையில் அப்போது ஊர் மக்கள் தீச்சட்டி எடுத்து நூதன முறையில் பூஜைகள் நடத்தினர் அதேபோன்று உலகை அச்சுறுத்தும் கொரானா கொடிய வைரஸ் ஒழிய இதுபோன்று சிறப்பு பூஜைகள் முதல் தடவையாக நடத்தி வருகிறோம். என்று கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com