Home செய்திகள் செங்கம் அருகே கள்ளச்சாராய ஊறல்களை மதுவிலக்கு போலீசார் கைப்பற்றி அழிப்பு;

செங்கம் அருகே கள்ளச்சாராய ஊறல்களை மதுவிலக்கு போலீசார் கைப்பற்றி அழிப்பு;

by mohan

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு சார்பில் அரசு மதுபான கடை மூடப்பட்டது இதனால் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆனைமங்கலம், தோக்கவாடி, மேல்புழுதியூர் மண்மலை, பரமனந்தல், நாச்சிபட்டு, இறையூர், பாச்சல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில சமூக விரோதிகள் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிக அளவில் ஏரி மற்றும் வனப்பகுதியில் கள்ளச்சாராய ஊரல்களை பதுக்கி வைத்து இரவு மற்றும் பகல் நேரங்களில் அதனை காய்ச்சி அதிக விலைக்கு விற்று வருவதாகவும் அரசு மதுபானம் இல்லாததால் மது பிரியர்கள் அதிகமானோர் கள்ளச் சாராயத்தை குடித்து வருவதால் உயிரிழப்பு ஏற்படும் முன்பு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி மக்கள் செங்கம் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர் இதனடிப்படையில் செங்கம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மலர் தலைமையிலான போலீசார் தினம்தோறும் செங்கம் பகுதிகளில் கள்ளச்சாராய காய்ச்சுவதாக வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது சட்டவிரோதமாக பதுக்கி வைத்த சுமார் 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை கீழே கொட்டி அழித்தனர் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பேரல்கள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர் இதனால் நிம்மதி அடைந்த அப்பகுதி மக்கள் பெண் காவல் ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!