தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக காரியாலய திறப்பு விழா ஓட்டப்பிடாரம் தொகுதி ஸ்பிக் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி பங்கேற்று காரியாலயத்தை திறந்து வைத்தார். மேலும் நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்து சட்ட மன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்பி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பின்னர் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசியபோது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறப்போவதில்லை. ஒருவேளை பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் ஏற்ப்பட்டால் நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய் விடும். தமிழ்நாட்டில், பாஜக என்ன சொல்ல நினைக்கிறதோ அதை செய்கிற ஆட்சி நடக்கிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அதே போல் அதிமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார். 5 ஆண்டு கால ஆட்சியில் இவர்கள் செய்யாததை மீண்டும் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே இதைவிட நகைச்சுவை வேறு இருக்கமுடியாது. ஆகவே முழுக்க முழுக்க பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்.
நாட்டை காப்பாற்ற, மக்களை காப்பாற்ற, ஜனநாயகத்தை நிலைநாட்டி, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழ மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு நியாயம் கிடைக்க ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என கூறினார்.
You must be logged in to post a comment.