சாலை பணிகளை தாமதப்படுத்துவதால் பொதுமக்கள் அவதி..

பாலக்கோடு அருகே கரகதள்ளி ஊராட்சிக்குட்பட்ட கசியம் பட்டிக்கு செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் சாலை கடந்த ஆறு மாத காலமாக  சீர் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

பாலக்கோடு அருகே கரகதள்ளி ஊராட்சி கசியம் பட்டி கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .இந்நிலையில் இவர்கள் பாலக்கோடு மற்றும் தர்மபுரி செல்வதற்காக  கரகதள்ளியில்  இருந்து கசியும் பட்டி செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த ஒரு கிலோமீட்டர் சாலை பழுதடைந்துள்ளதால். புதிய சாலை போட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பாக பழைய சாலையை செப்பனி டுவதாக கூறி  குழி தோண்டப்பட்டு ஜல்லிகள் பெயர்க்கப்பட்டன. இந்நிலையில் ஆறு மாதத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பணியானது இன்றளவும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே பொது மக்களாகிய நாங்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் முதியவர்கள் மருத்துவமனை செல்வதற்க. என  அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த சாலையை நாங்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது எனவே போர்க்கால நடவடிக்கையாக இந்த சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.