Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தில்லையேந்தல் கிராம பஞ்சாயத்திற்கு கீழக்கரை தனியார் நிறுவனம் சார்பாக சூரிய ஒளி விளக்கு..

தில்லையேந்தல் கிராம பஞ்சாயத்திற்கு கீழக்கரை தனியார் நிறுவனம் சார்பாக சூரிய ஒளி விளக்கு..

by ஆசிரியர்

செய்யது முகம்மது அப்பா (செய்யது அப்பா) தர்ஹா பகுதியில் சூரிய ஒளி தெரு விளக்குகள் பொதுமக்கள் நலன் கருதி M.S.A Land Promoters and Developers தில்லையேந்தல் கிராம பஞ்சாயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கீழக்கரை, தில்லையேந்தல் கிராமத்தில் உள்ள செய்யது முகம்மது அப்பா (செய்யது அப்பா) தர்ஹாவில் இருந்து காட்டு பள்ளி செல்லும் சாலையிலும், செய்யது அப்பா புது நகர் செல்லும் வழியிலும் விளக்குகள் இன்றி இருளில் இருந்து வந்த நிலையில் பொது மக்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு மக்கள் நலன் கருதி M.S.A Land Promoters and Developers உரிமையாளரும், வரலாற்று அராய்ட்சியாளருமான செய்யது அபுசாலிஹ் காலம் சென்ற தனது தாய், தந்தை நினைவாக அப்பகுதியில் சூரிய ஒளி தெரு விளக்குகள் பொருத்தி தர விருப்பம் தெரிவித்து தில்லையேந்தல் கிராம சபையிடம் அனுமதி கோரினார், அதனை ஏற்று அனுமதி வழங்கிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துனை தலைவர் மஹ்சூகா பானு அப்பகுதிக்கு நேரில் சென்று அழகிய புராதான வடிவிலான மின் கம்பத்துடன் கூடிய சூரிய ஒளி தெரு விளக்குகளை அங்கு நட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

.

இந்நிகழ்ச்சியில் தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் KRD கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார், M.S.A Land Promoters and Developers உரிமையாளர் செய்யது அபுசாலிஹ் காலம் சென்ற தன் தாய் ரஹ்மத் நிசா மற்றும் தந்தை சீனி அசனா நினைவாக அப்பகுதி பொதுமக்களுக்கு உபயம் செய்தார், தில்லையேந்தல் ஊராட்சி துனை தலைவர் மஹ்சூகா பானு, தாய் promoters நிறுவனர் அபித்அலி, Boo Bros ஆடையகம் பங்குதாரர் உதுமான் யாசிர், ஆகியோர் முன்னிலை வகித்தனர், பாருக், சலாம், சதக் ஆகியோர் உடன் இருந்து ஏற்பாடுகளை செய்தனர். பொது மக்கள் இப்பணியை வரவேற்று மேலும் இது போன்று நற்பணிகள் பலரும் செய்ய முன் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சலாம் மற்றும் பாருக் கூறுகையில். தம்பி அபுசாலிஹ் செய்யதப்பா பின்புறம் சுல்தான் துக்குனி முகம்மது காலனி என்ற பெயரில் ஒரு சிறிய குடியிருப்பு உருவாக்கி வருகிறார் அங்கு சூரிய ஒளி விளக்குகள் பொருத்தி வருகிறார் அதனை கண்ட அப்பகுதி மக்கள் தங்கள் நிலையை எடுத்து கூறி அப்பகுதி ரோடு மற்றும் வழிகளிலும் விளக்குகள் பொருத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று பொது மக்களின் நலன் கருதி இந்த உபயம் செய்து இருக்கிறார்கள் இது வரவேற்க்க தக்கது என்றனர்.

வரலாற்று பின்னனி..

சுல்தான் துக்குனி முகம்மது என்பவர் கீழக்கரைக்கு வருகை தந்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மிக பெரிய செல்வந்தர் ஆவார். அவர் மாலி நாட்டின் மன்னர் மன்சா மூசாவின் பேரர் என்றார். மன்சா மூசா இறப்பிற்கு பின் வந்த மூசா மகன் என்ற பெயர் கொண்ட மன்னனை மூசாவின் உறவினர் மாமன் மகன் என்ற மன்னன் அவர்களை நாடு கடத்தினார் அவர்கள் முதலில் மர்கா என்ற ஊரில் தங்கி பின் கீழக்கரையில் இன்றய செய்யதப்பா பகுதியில் குடியேறினர். அவர்கள் முன்பு ஆப்பிரிக்க சென்று குடியமர்ந்தனர் தமிழர்கள் என்றும் இறைதூதரின் தோழர் பிலால் அவர்களின் வழி தோன்றல் என்றார். மகன் என்பவரின் மகன்களே, துக்குனி, தும்முனி என்ற சகோதரர்கள் என்றும் மர்கா என்ற ஊரில் இருந்து கப்பல் ஏறி வந்ததன் காரனத்தால், அவர்களை மரிக்கா என்று அன்றைய மக்கள் அழைத்தனர் என்றும். அவர்களின் மன்னரை (கபுர்) நடு கற்களில் அம்பாரி கொடை பொறிக்க பட்டு இருக்கும். துக்குனி காட்டு பள்ளியில் அடக்கமாகி இருக்கிறார், தும்முனி இராமேஸ்வரத்தில் அடக்கமாகி உள்ளார். அழிந்து வரும் வரலாற்று சான்றுகளை இப்படியும் உயிரூட்டலாம் என்ற தகவலை அபுசாலிஹ் தந்தார். வித்யாசமான முயற்ச்சி வரவேற்க்கதக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!