Home செய்திகள் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பிடிபட்ட 8 நீளம் உள்ள ஐந்து சாரைப்பாம்புகள்..

உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பிடிபட்ட 8 நீளம் உள்ள ஐந்து சாரைப்பாம்புகள்..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பொன்னையா என்பவரது தோட்டத்தில் உள்ள சுமார் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் 5 சாரைப்பாம்புகள் இருப்பதாக பாம்பு பிடி வீரர் சினேக் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் சினேக் பாபு தலைமையிலான அவரது குழுவினர் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் சுமார் 8 அடி நீளம் உள்ள ஐந்து சாரை பாம்புகளை போராடி பிடித்துள்ளனர்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கிணற்றில் இறங்கி பாம்பை பிடித்து பாம்பு பிடி வீரர் சினேக் பாபு குழுவினரை வடக்கம்பட்டி கிராமத்தினர் வெகுவாக பாராட்டினர். அதனை தொடர்ந்து பிடிக்கப்பட்ட ஐந்து சாரைப்பாம்புகளும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வனப்பகுதிக்குள் அவிழ்த்து விடப்பட்டன.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!