123
திருவண்ணாமலை மாவட்டத்தில் காரணமின்றி சுற்றித்திரியும் வாகனங்களை கட்டுப்படுத்த ஸ்மார்ட் கார்ப் செயலியை அறிமுகப்படுத்தி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி வேலூர் சாலை ராமகிருஷ்ணா பெட்ரோல் பங்க் அருகே ஸ்மார்ட் கார்ப் செயலியை துவக்கி வைத்தார். காரணமின்றி வெளியில் சுற்றி வரும் வாகனங்களை கண்டறிந்து அவற்றை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும், பெட்ரோல் பங்குகளில் காவல்துறையினரின்அனுமதிக்கு பின்னரே ஒருமுறை மட்டும் பெட்ரோல் போடவும் ஒரே ஒரு பெட்ரோல் பம்பை மட்டும் உபயோகிக்கவும் பெட்ரோல் பம்ப் பணியாளர்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்திள்ளார்.
You must be logged in to post a comment.