இராமநாதபுரத்தில் எஸ்டிட்டியு பொதுக் கூட்டம்..

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) சார்பு அணியான எஸ்டிட்டியு ராமநாதபுரம் (கிழக்கு )மாவட்டம் சார்பில் பொதுக் கூட்டம் ராமநாதபுரம் சந்தை திடல் பகுதியில் நடந்தது. மாவட்டத் தலைவர் எஸ்.முஸ்தாக் அகமது தலைமை வகித்தார். எஸ்டிபிஐ மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.சுலைமான், சோமு, ஏ.அப்பாஸ், ஒருங்கிணைப்பாளர் என். காதர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா வரவேற்றார். தொமுச மாவட்ட தலைவர் கே.காஞ்சி, சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஆர்.குருவேல், எல்ஐசி ஊழியர் சங்க தலைவர் டி.முத்துப்பாண்டி, ஏஜடியுசி மாவட்ட துணை தலைவர் லோகநாதன், செயற்குழு உறுப்பினர் சண்முகராஜ், எஸ்டிபிஐ., மாவட்ட செயலாளர் எஸ்.அஸ்கர் அலி, எஸ்டிட்டியு மாநில செயலாளர் அப்துல் சிக்கந்தர், மாநில துணை தலைவர் ஆசாத் ஆகியோர் பேசினார். மாவட்ட பொருளாளர் அப்துர் ரஹ்மான் நன்றி கூறினர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தது வேலை பாதுகாப்பு நடவடிக்கை தொழில்முனைவோருக்கான சலுகைகளுடன் இணைத்திடுங்கள் எந்தவித விதிவிலக்கின்றி அனைத்து அடிப்படையான தொழிலாளர் சட்டங்கள் முறைப்படுத்த வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன., 8, 9 தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தம் குறித்து பேசினர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்