நெல்லையில் மூளைச்சாவு அடைந்தவர் உறுப்புகள் அகற்றம்..

நெல்லை மாவட்டம் V.K புரத்தை சேர்ந்தவர் பழனிகுமார்.வயது 39. இவர் தனியார் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 2 ந் தேதி  நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்காததால் மூளை சாவு அடைந்தார். பழனிகுமாரின் இருதயம், 2 கிட்னி, கல்லீரல், கண், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் பணி பாளையாங்கோட்டை அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது.

செய்தி:- கடையம் பாரதி