கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30.03.2019 அன்று காலை 10.30 மணியளவில் 19-வது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜனாப் ரஜபுதீன் தலைமையேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை தொழிலாளர் நல ஆணையர் திரு.N.கோவிந்தன் அவர்கள் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதற்கான தகுதியினை, கல்வி சார்ந்த அறிவினை உயர்த்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் பயிலும் மாணவர்கள் ஆடிட்டிங் போன்ற உயர் பணிகளுக்கு உண்டான தகுதியினை பெற்றிருத்தல் அவசியம். தங்களது பேராசிரியர்களை மிகச் சிறந்த வழிகாட்டிகளாக பாவித்து தங்களின் வாழ்கை பாதையினை வகுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது போன்ற பணிகளுக்கு மாநில மற்றும் மத்திய அரசு சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளில் வெற்றி பெற நேரங்களை விரயம் செய்யாமல் மாணவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். நிச்சயமாக கடின உழைப்பு நல்ல பலன் தரும். மாணவ மாணவியர், பாடங்களை நன்கு புரிந்து சிரத்தையுடன் கற்றறிந்தால் இது போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். நமது நாட்டில் மிக உயர் பதவியான மாவட்ட ஆட்சியர் பணிக்கென போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் பெரும்பாலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்றவர்களே ஆவர். ஆகையால் மாணவர்கள் பொழுது போக்கு அம்சங்களை தவிர்த்து மன உறுதியுடன் கல்வி கற்றால் இது போன்ற உயர் பதவிகளுக்கு நாம் இலகுவாக சென்று விடலாம.;” என்றார்.
இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நெறியாளர் முகம்மது ஜஹபர் மற்றும் முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவின் முன்னதாக முதுகலை வணிகவியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும்ää சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆங்கிலத்துறைப் பேராசிரியர் சுலைமான் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேதியியல் துறைத்தலைவர் அப்துல் சர்தார், முதுகலை ஆங்கிலத் துறைத்தலைவர் நெல்சன் டேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் யூசுஃப், செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்திருந்தனர்.
You must be logged in to post a comment.