சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற செய்யது ஹமீதா கலை கல்லூரி..

அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிடையே சதுரங்க போட்டி தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரியில் நடைபெற்றது. அப்போட்டியில் செய்யது ஹமீதா கலைக் கல்லூரி 2ம் இடம் பெற்று Runners பட்டத்தை பெற்றது. இக்கல்லூரி சதுரங்க போட்டியில் பரிசு பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இப்போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் க.தவசிலிங்கம் மற்றும் சதக் அறக்கட்டளை சேர்மன் யூசுப், செயலாளர் சர்மிளா, இயக்குனர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் E.இரஜபுதீன் ஆகியோர் பாராட்டினார்கள்.