முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருவண்ணாமலையில், 1991- 93ம் ஆண்டு, டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி, கணித பாடப்பிரிவில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி, தலைமை ஆசிரியர் ஹீயூபர்ட் தனசுந்தரம் தலைமை வகித்தார். இதில், 60க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், பள்ளி கல்விக்கு பின், தங்களின் மேற்படிப்பு, தற்?போதைய பணி, குடும்ப உறவுகள் குறித்து பேசி மகிழ்ந்தனர். பலர், தங்களின் பணி அனுபவங்களை கலந்துரையாடினர். பழைய பள்ளி நினைவுகளை, நினைவு கூறும் வகையில், மியூசிக்கல் சேர், பாட்டு பாடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தினர். தொடர்ந்து, ஆண்டுதோறும் சந்திப்பது மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய, பணிகள் குறித்து கலந்துரையாடினர்.