Home செய்திகள் அரசு பள்ளி மாணவிகளுக்கு முதல்வரின் உயர் ஊக்கத் தொகை

அரசு பள்ளி மாணவிகளுக்கு முதல்வரின் உயர் ஊக்கத் தொகை

by mohan

64-வது தேசிய பள்ளிக் கல்வி குழும விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற திருவண்ணாமலை வி.டி.எஸ். பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவிகளுக்கு முதலமைச்சரின் உயர் ஊக்கத்தொகையான ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கடந்த 2018-2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 64-வது தேசிய பள்ளிக் கல்வி குழும விளையாட்டு போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பாக மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் திருவண்ணாமலை பகுதி மாணவிகள் சாதனை படைத்தனர். தடகள விளையாட்டில் பங்கேற்ற திருவண்ணாமலை வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீவித்யா¸ கையுந்துப் பந்து விளையாட்டில் பங்கேற்ற சொரக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்னேகா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். கோ-கோ விளையாட்டில் பங்கேற்ற மேல்பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ர. பவித்ரா மூன்றாம் இடம் பிடித்தார். இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் உயர் ஊக்கத்தொகை விருது அறிவிக்கப்பட்டது.அதன்படி மாணவிகள் ஸ்ரீவித்யா¸ ஸ்னேகா ஆகியோருக்கு தலா ரூ.1.50 லட்சமும்¸ பவித்ராவுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது. இந்த தொகையை மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம்¸ நடுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 21ந் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைய

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com